இதுவரை,சப்தமில்லாமல் வந்து படித்துள்ளவர்கள் ....

Friday 20 September 2013

அக்கா டார்லிங் - அத்தியாயம் - ஒன்று – “நீங்களே சொல்விடுங்கள் அக்கா”

பாளையம்கோட்டை சிறையின் வாயிலில் ஜீப் வந்து நின்று ரொம்ப நேரமாகியும் கீழே இறங்காமல் அமைதியாக ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி. 

சார், ஜெயில் வந்தாச்சு சார் - மெதுவாக காதில் படும்படி அழைத்தான் ஜீப் டிரைவர் முருகன். 

அப்படியாப்பா..... நான் கவனிக்கவில்லை.... வந்து ரொம்ப நேரம் ஆச்சா முருகன் ?   

இல்லீங்க்.... சார், அஞ்சு நிமிஷம் தான் ஆச்சு சார்......

அப்படியா......

என்ன சார் பயங்கர யோசனை .... நீங்க இப்படி இருந்து நான் பார்த்ததே இல்லை சார்.

இல்லடா முருகா...... கொஞ்சம் மனசு சரியில்லை.....

என்ன சார் ஆச்சு....

கலெக்டர் அலுவலகத்தில்  இருந்து நான் பார்க்கிறேன் ,காலையில் இருந்த மலர்ச்சி முகத்துல இல்லையே ?

என்ன ஆச்சு சார் ?

நம்ம பயலுக நாலு பேருக்கும் ... எல்லாம் முடிஞ்சு போச்சுடா.......முருகா

என்ன சார் சொல்றீங்க, ஜனாதிபதிகிட்ட இருந்து கடுதாசி வந்துருச்சா ? இவ்வளவு வேகமாவா ? ரெண்டு வாரம் தான சார் ஆச்சு....

என்ன சார் தீர்ப்பு ? என்று பரபரப்புடன் கேட்டான் முருகன்.

கருணை மனு தள்ளுபடி ஆகியிருச்சுடா முருகா.... நாலு பேருக்கும் தூக்கு தண்டனை உறுதியாயிருச்சுடா முருகா.

சாவட்டும் சார் ,இவைங்கலெல்லாம் உயிரோடு இருந்து என்ன மயிரயா புடுங்க போறானுங்க, சாவட்டும் நாயிங்க.

நீங்க ஏன் எஜமான் இந்த நாய்களுக்கு போய் வருத்தப்படுறீங்க ?   
அப்படியெல்லாம் சொல்லாதடா முருகா.... அவைங்க உயிரும் உயிர்தானடா செல்லம்....

நீயும் நானும் ரொம்ப நல்லவைங்களா...

அந்த கணக்கு டீச்சர் விமலாவை நீ மேட்டர் பண்ணிட்டு ஏமாத்தலையா ?

நானு, ரொம்ப நல்லவனா...என் கதை உனக்கு தெரியுமாடா ?

அப்படியே நீ கேட்டாலும் என்னால் வெளியில் சொல்லத்தான் முடியுமா ?

தூக்கு தண்டனை தீர்ப்பு கொடுத்தாரே ஜட்ஜு வடிவேலு, அவரோட முதல் பொண்டாட்டி எங்கேன்னு தெரியுமா ?

போங்கடா..... 

என்னடா வாழ்க்கை இது.

கொட்டி தீர்த்தார் இன்ஸ்பெக்டர் வீரபாண்டி.   


சரி, ஆனது ஆகட்டும்....

எப்படியும் சொல்லித்தானே ஆகணும்.....

அதுக்குதானே எனக்கு சம்பளம் தர்றாங்க ....

என்று புலம்பியவாறு ஜீப்பை விட்டு இறங்கினார் வீரபாண்டி
அதற்குள்ளாக அங்கு, காலையிலிருந்து காத்திருந்த குற்றம் சுமத்தப்பட்ட (தண்டனை கொடுக்கப்பட்ட) நால்வரில் ஒருவரின் மனைவி ஓடி வந்து முத்துபாண்டியிடம்.......

என்ன சார் ஆச்சு ?

டெல்லியில் யாரோ பெரிய ஆபிசர் சொன்ன விட்டுருவாங்கன்னு சொன்னாரே அவரது வக்கீல் - அங்கிருந்து ஏதும் செய்தி வந்ததா சார் ?  
யாரு.... அய்யோ  - அது ஜனாதிபதி – இதுகூட உனக்கு தெரியலயே தாயீ.......... வருத்தப்பட்டார் வீரபாண்டி

எனக்கு என்ன சாமி தெரியும்.....சரி யாராக வேணாலும் இருக்கட்டும் ... என் வீட்டுக்காரை எப்ப சாமி விடுதலை செய்வீங்க ?

அடுத்த வாரம் அவரது தங்கைக்கு கல்யாணம் சார்... அண்ணன் என்கிற முறையில் முறை செய்யவேண்டும்   

அவர் தனது தங்கச்சி மேல ரொம்ப பாசமாக இருப்பார் சார்

எப்படியும் அவர் விடுதலையாகி விடுவார் என்று சொல்லி நேற்றுகூட அவரது வக்கீல் இது சம்பந்தமாக ஆயிரம் ரூபாய் வாங்கினார் சார் 
  
அது வந்துமா....... இழுத்தார் வீரபாண்டி

தனது பெரிய ஆபீசர் படும் வேதனையை உணர்ந்த முருகன் நேராக அங்கு வந்து....

இந்தாமா...

இது என்ன பழக்கம் ... நீ இங்கெல்லாம் வரக்கூடாது ....

பெரிய வக்கீல் மாதிரி துருவி துருவி கேள்வியா கேட்கிற.....

உன் புருஷன் மூணு பேரோட சேர்ந்து ஒரு பெண்ணை கற்பழித்த குற்றத்தை நீதிபதியிடம் ஒப்புக்கொண்டுள்ளான்.......சரியா

அதுக்கு அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்து தீர்ப்பு வந்துள்ளது......
ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்துள்ளான் உன் புருஷன்

இந்த சூழல்ல ஐயாவே உங்களுக்கு உதவப்போய் நிறைய மன உளைச்சல்ல இருக்கார் அவரைப்போய் தொல்லை கொடுக்கிறாயேமா...

கொஞ்சம் தள்ளி நில்லு என்று சொல்லி முத்துபாண்டியை அவரது அறைக்குள் அழைத்து சென்றான் முருகன்.

முருகா..... என் நிலைமையை பார்த்தியா ...

நீயெல்லாம் என்னை எஸ்கார்ட் பண்ணி காப்பாத்தும் நிலையை பார்த்தியாடா.....

என்ன எஜமா செய்யறது.....

உண்மையின் முன்னாடி நீங்க குற்றவாளி – 

அது உங்க மனசாட்சியை கசக்கிறது .....

என்னடா சொல்ற ..

நானா குற்றவாளி ?

எல்லா மயிரும் தெரியும் எஜமான்.........

அந்த அரிசி மில் முதலாளி கொடுத்த பணம் லட்ச ரூபாய்.... 

உங்க பையனோட காலேஜ் பீசாக மாறியது எனக்கு தெரியும் முதலாளி........  
      
எப்படிடா உனக்கு இந்த விஷயம் தெரியும் ? ஆச்சர்யத்துடன் கேட்டார் வீரபாண்டி 

என்ன கொடுத்து யாரிடம் எந்த காயை நகர்த்த வேண்டும் என்று எனக்கு தெரியும் சார்.

ரைஸ் மில் முதலாளி முதலில் எனது வீட்டிற்குத்தான் வந்தார்.

சம்பவம் நடந்த இரவு அவரது மகனும் அந்த கேசில் சம்பந்தப்பட்டு இருப்பதை எனக்கு அவர்தான் சொன்னார், எப்படியாவது அவரது மகனை காப்பாத்தணும்னு சொல்லி அழுதார் அவர்......

ஏற்கனவே பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவியை, அவரது மகனுக்கு பதிலாக இந்த கேசில் சேர்க்க நீங்கள் சொன்னது பற்றி என்னிடம் சொன்னார்.....உங்க மூளையே மூளை தான் சார்.

என்னடா செய்யுறது.... நான் நேர்மையாக இருந்து எனது பிள்ளைக்கு அவ்வளவு  பெரிய இன்ஜினியரிங் காலேஜுல சீட் வாங்க முடியுமா?
ஐம்பது ஆயிரம் தருவதாக சொன்னார்....

சரி என்று திட்டம் தீட்டி ....

ரவியை அடித்து , உதைத்து , மிரட்டி அவனது ஏழ்மையை பயன்படுத்தி அவனை மில் முதலாளியின் பையனுக்கு பதிலாக இந்த கேசில் ஆஜராக சொன்னது நான்தான்.... என்று உண்மையை நினைவு கூர்ந்தார் வீரபாண்டி.

சார், எனக்கு ஒரு சந்தேகம்... ரொம்பநாளா கேட்கணும்னு இருந்தேன்....

ரவியை வீழ்த்திய ஏழ்மை எப்படி அவனை வீழ்த்தியது?

ஐம்பதாயிரம் எப்படி சார், லட்ச ரூபாயா மாறுச்சு ?

அது ஒண்ணும் இல்லைடா..... 

அவனது தங்கச்சி கல்யாணத்துக்கு அவனுக்கு பணம் தேவைப்பட்டது....

அதனால அவனை ஆசை காட்டி ஒப்புக்கொள்ள வைத்தேன்.

ஏழைகள் இந்த நாட்டில் உள்ளவரை....நமக்கு குற்றவாளிகளுக்கு மாற்று நிச்சயம் கிடைக்கும்டா.....

பிச்சைக்கார பசங்களுக்கு பாசம் மட்டும் முழுக்க முழுக்க உண்டுடா......

பணத்த கொடுத்து சாமி படத்துக்கு முன்னாடி நிக்க வச்சு சத்தியம் செய்ய வைத்தேன்.......

இன்னைக்கு வரை அவன் தனது சொல்லை மாத்தலடா முருகா.....  
    
மாத்துனா சாமி குத்தம்னு அவன் நம்புறான்.......

ஆனா, கற்பழிக்கப்பட்ட பொண்ணு செத்துப் போவாள்னு எவனும் எதிர் பார்க்கலடா முருகா.....

சனியன் செத்து எல்லாத்தையும் மாத்திருச்சுடா........

வெறும் கற்பழிப்பு கேசு ... கொலையா மாறி... பத்திரிகை காரங்க கையுல சிக்கி ..... ரொம்ப பெருசா போகும்னு யாருடா நினைச்சா ?
    
இப்போ பாருடா ......

அவனுக்கும் மத்த மூணு நாய்களுக்கும் தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது....

இப்போ என்னடா செய்யுறது..... வருத்தப்பட்டார் வீரபாண்டி.

அவ்வளவுதான்....

ரவி உண்மையை சொல்லிவிடுவான் என்று மிரட்டி மில் முதலாளியிடம் இன்னும் ஐந்து லட்சம் வாங்குங்க......

சும்மாச்சிக்கும் மில் முதலாளியின் மகனை நான், போய் “விசாரணைக்கு அழைப்பு வரும் என்று சொல்லி மிரட்டி வைக்கிறேன்.....   

டேய்.... தப்புக்கு மேல தப்பு செய்யுறோம்டா....

விடுங்க பாஸ்... மனசாட்சியாவது... மயிராவது...... அடுத்த வருஷம் பீஸ் கட்ட பணம் வேண்டாமா......

சரி என்னமோ செய்டா...... நான் கண்ணை மூடிக்கிறேன் ....

சாமி மாதிரி ஆகப்போறீங்கன்னு சொல்லுங்க பாஸ்......என்றான் முருகன்

டேய்.... உனக்கு ரொம்ப நக்கல்டா....

ஆமா உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா ? இல்லையா ?

ரவி மாதிரி படிக்காத கிராமத்து பிச்சைக்கார பசங்கள பொம்மை மாதிரி ஆட்டிவைக்க ஒரு சத்தியம் நமக்கு உதவுது......பாத்தீங்களா பாஸ்.

இதுக்கு கடவுள் நம்பிக்கை தான் காரணம்....

அதனால மனிதர்களின் கடவுள் நம்பிக்கையை நான் வணங்குறேன்.
வாழ்க மக்களின் கடவுள் நம்பிக்கை.........


டேய் , முருகா நாம பாட்டுக்க இப்படி கைதிகளை விளையாட்டு பொருள் போல பாவித்து - அவர்களை சகட்டு மேனிக்கு பந்தாடுவது சரியாடா ?

சரி இல்லைதான் ... பாஸ் ...... இப்போ நாம செய்யறத சரின்னு நாம சொல்லவே இல்லையே .....

நமக்கு வேறு வழியும்  இல்லையே.....

நீங்களும் நானும், இருபது வருஷத்துக்கு முன்னாடி போலீஸ்  கல்லூரியில் படிச்ச காலத்துல ஒரே அறையில் தங்கி வளர்ந்தவர்கள் ... 

அந்த காலத்துல நிறைய நல்ல நல்ல சிந்தனைகளை மனசுல தேக்கி வச்சு வாழந்த சிறப்பான இளைஞர்கள் நாம்.....

திறந்த வெளி கல்லூரி முறையுல நீங்க மட்டும்  நிறைய படிச்சு , அப்படியே மேல மேல போயுட்டீங்க பாஸ்...


நாலு டயர்களுக்கு இடையே ... ஒரு டிரைவராக .......நான் மாட்டிக்கிட்டேன்..... 

என் பொண்டாட்டிகிட்ட சண்டைபோட்டே எனது காலமெல்லாம் கரைந்துபோச்சு .... இப்போ நான் வண்டி ஓட்ட நீங்கள் உட்கார்ந்து வர்றீங்க ... 

சரி, பழச விடுங்க பாஸ்....

இன்னைக்கு பாருங்க .....

எல்லாமே மாறிவிட்டது......

பதினெட்டு வருஷம் முன்னாடி கற்பழிப்பு கேசுல மாட்டிய இரண்டு பேரை நாம அடுச்சே கொன்றோமே ... ஞாபகம் இருக்கா பாஸ்......

சக மாணவியை கற்பழித்த கல்லூரி மாணவர்கள் இரண்டுபேரை கையும் களவுமாக பிடிச்சு விசாரித்த பொழுது.... மாணவர்களை விட்டு விட வேண்டும்... பெரிய கலவரம் வந்துரும்னு சொல்லி -  மேல் அதிகாரி தடுத்த பொழுது .. அவைங்கல கோபம் தீர அடித்து , உதைத்து - வேணும்னே தப்பிக்க வைத்து ...

பின்னாடியே சென்று .......

ஜீப்பை ஏத்தி கொன்றோமே ... ஞாபகம் இருக்கா பாஸ்....

இன்னைக்கு நாம இப்படி மாருவோம்னு நினைச்சோமா  ?

அதுதான் பாஸ் வாழ்க்கை ........

குட்டியில குரங்கு கூட நல்லாத்தான் இருக்கும் - இலசுல எல்லா  நாயும் நல்லாத்தான் கொலைக்கும்.....

மயிராப்போன சமூகம் நம்மள இப்படி மாத்திருச்சு பாஸ்.....

கற்பழிப்பு கேசுல மாட்டும் எல்லா நாயையும் அடிச்சே கொல்லணும்னு நாம  பலமுறை பேசியுள்ளோம் ...இப்போ பாருடா, அவைங்கள பாதுகாக்க அல்லும் பகலும் உழைக்கிறோம் ....

பல சமயத்துல செத்து போகணும் போல இருக்கு பாஸ் .... 

அந்த ரவியோட முகத்தை பார்த்து "உனக்கு தூக்கு" என்று எப்படிடா சொல்வது, மத்த மூணு பேரும் சாவதை பற்றி கவலை இல்லை - இந்த ரவிப்பய ... பாவம்டா அவன் 

சாவது மட்டுமல்ல......... 

அவனது குடும்பம் , ஐந்து வயது பையன் ... எல்லாத்தோட எதிர்காலமும் என்னவாகுமோ என்று யோசிக்கவே கஷ்டமாக இருக்குடா ...என்று மனசாட்சின் கடைசி வாக்குமூலத்தை பதிவு செய்தார் வீரபாண்டி.....

இன்னுமா  உங்களுக்கு மனசாட்சி உயிரோட இருக்கு பாஸ் ? ...

முதல்ல அந்த சனியன கொல்லுங்க பாஸ் .... 

அதனால ஒரு மயிரும் பயன் இல்லை...... என்று ஏற்கனவே இருள் நிறைந்த நிலையில் உள்ள வீரபாண்டியின் உள்ளத்தை மேலும் இருளாக்கினான் முருகன்.

பேசாம, அக்கா டார்லிங் கிட்ட இந்த கடுதாசியை கொடுத்து , "நீங்களே சொல்லிவிடுங்கள் அக்கா" என்று சொல்லிவிடுவோம் என்று முடிவுக்கு வந்தார் வீரபாண்டி.

"அந்த அக்காதான்  இதுக்கு சரியான ஆள், தயவு தாட்சன்யம் இல்லாமல் இந்த கடிதத்தை ரவி கிட்ட ஒப்படைக்க அவரால்தான் முடியும்" என்று ஆமோதித்தான் முருகன். 

இருவரும் அக்கா டார்லிங்குடைய  அறைக்கு சென்றார்கள்..........

  
      
       



No comments:

Post a Comment