இதுவரை,சப்தமில்லாமல் வந்து படித்துள்ளவர்கள் ....

Saturday 21 September 2013

யார் இந்த அக்கா டார்லிங் ?

அக்கா டார்லிங் என்பவர், ஒரு கற்பனை கதாப்பாத்திரம்.

அவள் ஒரு மருத்துவர்.

இணைய தமிழ் வரலாற்றில் முதல் முறையாக பாலுணர்வு பற்றி ஆண்களுக்கு நல்ல புத்தி சொல்லும் தைரியமான பெண். 

ஆறு வயது சிறுமியாக இருந்த பொழுது ஒரு மத வழிபாட்டுத்தளத்தில் ஒரு காமுகனால் கற்பழிக்கப்பட்ட சூழலில் மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இரண்டு வருடம் வாழ்ந்தவள் அவள்.

அன்றுமுதல் அவள் ஒரு கடுமையான நாத்தீகவாதி. 

யாருக்கும் தெரியாமல் மனநலக்காப்பகத்தில் இருந்து தப்பிச்சென்று , அவளை கற்பழித்த அந்த காமுகனை தலையில் கல்லை போட்டு கொன்று - நேராக காவல் நிலையத்தில் சரணடைந்து மிகப்பெரிய அதிர்ச்சி அலையை தமிழகத்தில் அந்தக்காலத்தில் உருவாக்கியவள்.

சிறுமி என்பதால் குறைவான தண்டனை பெற்று , அதன் பின்னர் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்து - மாநிலத்திலேயே அதிக மதிப்பெண் பெற்று - அதன் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து - MBBS படித்து , அதன் பின்னர் உளமருத்துவம் பயின்று - காமம் சார்ந்த குற்றங்களை மனிதர்கள் ஏன் புரிகிறார்கள் ? என்பது பற்றி நரம்பியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் சர்வதேச அளவினில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வாளர்.

திருமணம் ஆகாதவள்.

அவளுக்கு வயது 42 

அச்சம் என்றால் என்னவென்றே தெரியாதவள் அவள் 

பாலுணர்வு சார்ந்த செய்திகளை எந்தவித தயக்கமும் இல்லாமல் தனது நோயாளிகளிடம் விளக்கும் தெளிவான சிந்தனை உடைய அவளை பார்த்து , அவளுடன் விவாதிக்க பெரிய பெரிய மருத்துவர்களே தயங்குவர்.

தப்பு என்றால் தப்பு என்று சற்றும் மறைக்காமல் முகத்தின் மீது பேசும் குணம் உடையவள் அவள் 

அவளுக்கு பல ரசிகர்கள்..... 

நிறைய நிறைய எதிரிகள் உள்ளார்கள்...... 

காம உணர்வின் மிகுதியால் குற்றமிழைத்த கைதிகளை மன்னிக்கலாமா அல்லது தூக்கு தண்டனை கொடுத்து அழிக்க வேண்டுமா ? என்பது பற்றி உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க தோதுவாக ஒரு ஆய்வினை மேற்கொள்ள , பாராளுமன்றத்தின் பரிந்துரையின் பேரில் தற்பொழுது அவள் பாளையம் கோட்டை சிறைச்சாலையில் பணியில் உள்ள தலைமை மருத்துவர்.

அவளது நோயாளிகள் அவளை அன்புடன் "அக்கா டார்லிங்" என்று அழைப்பர்.

அழகாக 

அறிவாக

திறமையாக

நியாயமாக

அனைத்தையும் விட,  தைரியமாக

சிறைச்சாலையில் அன்புடன் கைதிகளுக்கு சேவை செய்யும் வித்தியாசமான கதாப்பாத்திரம் , அக்கா டார்லிங்.  







No comments:

Post a Comment