இதுவரை,சப்தமில்லாமல் வந்து படித்துள்ளவர்கள் ....

Sunday 22 September 2013

மனித ஆக்கிரமிப்பு உணர்வை ஒருமுகப்படுத்த முடியுமா ?

அக்கா டார்லிங்குடைய  அறைக்குள் செல்லவே  வீரபாண்டியனுக்கும் , முருகனுக்கும் மிகவும் அச்சமாக இருந்தது .....

டேய் , முருகா - இந்த அக்கா ரொம்ப சாதுர்யமான டாக்டர்டா, நம்ம முகத்தை பார்த்தே நம்முடைய கள்ள ஆட்டத்தை தெரிந்துகொள்வார்.

என்ன சார் செய்வது , வாங்க ஒரு டீ சாப்பிட்டுவிட்டு செல்வோம், அவங்க என்ன கேட்டாலும்  பிடி கொடுக்காமல் பேசுங்க...

கொஞ்சம் அசந்தாலும் நாம செஞ்ச தப்பயெல்லாம்  இந்த அக்கா கண்டுபிடுச்சுரும்.... என்று   வீரபாண்டியை வழிநடத்தினான் முருகன்  

இருவரும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

டாக்டர் அறியாள் , என்னும் அக்கா டார்லிங் பல நூல்களுக்கு இடையே ஆழ்ந்து ஏதோ படித்துக்கொண்டிருந்தார்.

என்னங்க , பாண்டி ? - ரெண்டு நண்பர்களும் ஒன்றாக வர்றீங்க ?

இரண்டு தகுதிப்பாட்டில் உள்ள இரண்டு போலீஸ் காரர்கள் ஒன்றாக வந்தால் எனக்கு சந்தேகம் வருது ....

மேடம், என்ன புத்தகம் படித்துக்கொண்டு உள்ளீர்கள் ? என்று பேச்சுக்கொடுத்து பேச்சை வழிமாற்றினார் வீரபாண்டி 

1932 ஆம் ஆண்டு , ஜூலை 30ஆம் தேதி "உளவியல் பகுப்பாய்வின் தந்தை" என்றும்  "இயல்புணர்ச்சிகளின்  உலகில் ஓர் வல்லுநர்" என்றும் போற்றப்படும் , சிக்மண்ட் பிராய்ட்  (மே 6, 1856 – செப்டெம்பர் 23, 1939)  




ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்க்கு  எழுதிய கவலை தோய்ந்த கடிதங்களின் நகலை படித்துக்கொண்டு உள்ளேன்.



ரெண்டு பேரும் , வேறு வேறு துறை சார்ந்தவர்கள் ... அவர்களுக்குள் கடித தொடர்பா ?

ஏன் இருக்கக்கூடாதா ?

அவர்களுக்குள் என்ன தொடர்பு இருந்திருக்க முடியும் , என்று கேட்டான் முருகன்.

போர் அச்சுறுத்தலிலிருந்து  மனித குலத்தை விடுவிக்க வழி ஏதேனும் உள்ளதா ? 

மனிதர்களிடையே நிலவும் பகைமை , அழிவு போன்ற தூண்டுதல்களில் இருந்து மக்களை காப்பாற்ற உதவுகின்ற வகையில் மனித ஆக்கிரமிப்பு உணர்வை ஒருமுகப்படுத்த முடியுமா ? 

என்று கேள்வி எழுப்பி சிக்மண்ட் பிராய்ட் அந்த கடிதத்தை எழுதினார் .

அதற்கு என்ன தேவை இருந்தது ? என்று கேட்டார் முருகன்.

அந்த காலத்தில் ஐரோப்பாவில் பாசிச - நாசிச வன்முறைகள் பரவிவந்த நேரம்  அது.  



இந்த கடிதம் எப்படி உங்களுக்கு கிட்டியது ? ஆச்சர்யம் வீரபாண்டியை தொற்றிக்கொண்டது.

பன்னாட்டு அறிவார்ந்த ஒத்துழைப்பு நிறுவனம் 1933 ஆம் ஆண்டு , "போர் ஏன்" என்ற தலைப்பில்  வெளியிட்ட கடித தொகுப்பில் இந்த கடிதம் உள்ளது.

இதற்கும் உங்கள் ஆய்விற்கும் என்ன தொடர்பு உள்ளது மேடம் ? ஒன்றும் புரியாமல் நின்றார் முருகன்.

இங்குள்ள கைதிகள் அனைவரும் குற்றம் இழைத்தவர்கள் என்று  ஏற்கும் நிலையில் ஒரு செய்தியை நாம் ஏற்கத்தான் வேண்டும்.

சட்டத்துக்கும், வன்முறைக்கும் இடையே இன்று வெளிப்படையான முரண்பாடு உள்ளதாக தோன்றலாம், இருப்பினும் ஒன்றில் இருந்துதான் மற்றொன்று உருவாகியது என்று நாம் சிந்தித்து  பார்க்க   வேண்டும். 



ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையே நலன்கள் குறித்து மோதல் ஏற்படும் பொழுது , அது பொதுவில், வன்முறை மூலமாக தீர்த்துக் கொள்ளப்படுகிறது. விலங்குகள் உலகிலும் அப்படித்தான். மனிதன் அதற்கு விதிவிலக்கல்ல.

இருப்பினும், மனிதர்களிடையே கருத்து மோதல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது, அதுபோது அவை மிகவும் உயர்வான சித்தாந்தங்கள் பற்றியவயாகவும் அமைய வாய்ப்புள்ளது. அவற்றை தீர்த்துக்கொள்ள வேறு வேறு முறைகள் தேவை - இந்த முறைகளை    நாம் மேலான முறைகள் என்று காணுகையில் - இவை மனித பரிணாம வளர்ச்சியில் பிற்பகுதியில் தோன்றியவையாகும். 

ஆரம்ப நாட்களில் சிறு சிறு சமூகங்களில் உடைமைகள் பற்றிய பூசல், ஆதிக்க உரிமை போன்றவை முரட்டு பலம் மூலம் தீர்மானிக்கப்பட்டது, பின்னர் வந்த காலத்தில் உடலின் வலிமை அந்த இடத்தை பெற்றது, அடுத்து அடுத்து அதன் வேறு வடிவங்கள் தோன்ற ஆரம்பித்தன.


தொடரும்...... 





என்ன உதவி நான் செய்யனும்.....


மேடம்.... அது ஒன்றும் இல்லை  -சமாளிக்க முயன்றார் வீரபாண்டி 


சும்மா சொல்லுங்க ... பாண்டி , எந்த கைதியின் வாழ்வு முடியப்போகிறது ?


மேடம் , நீங்க ரொம்ப தெளிவா இருக்கீங்க ...


நம்ம ரவி மற்றும் அந்த பள்ளிக்கூட மாணவி கற்பழிப்பு கேசுல தூக்கு தண்டனை உறுதியான, ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்த மூணு பேருக்கும் தூக்கு தண்டனை உறுதியாகிவிட்டது என்று விளக்கினார் வீரபாண்டி 


அய்யோ , முடிஞ்சுபோச்சா ......


அவனுங்க ரொம்ப நம்புநாங்களே... 


எப்படியும் ஜனாதிபதி , குறைந்தது காலத்தை கடத்தவாவது உதவுவார்னு நம்புநாங்களே...


சீக்கிரமா தள்ளுபதி ஆகிவிட்டதா ?


நல்லது , அரசு என்னை  போலத்தான் இயங்குதுன்னு சொல்லுங்க ... பாண்டி.


அக்கா டார்லிங் முகத்தில் மலர்ச்சி.


மேடம், நீங்க ஒரு டாக்டர், ஒரு உயிர் சாகப்போகுது   - வருத்தப் படலனாலும் பரவாயில்லை - இப்படி சந்தோசப்படுவது எதுக்கு டாக்டர் ?


நீங்க ரொம்ப வித்தியாசமான டாக்டர்........





  








No comments:

Post a Comment